திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாகர்கோவிலில் மீள்குடியேற்றம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)


யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்திற்குட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாதையான பருத்தித்துறை-மருதங்கேணி பிரதான வீதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து முன்னர் யுத்த எல்லைப் பிரதேசமாக இருந்த நாகர்கோவில் கிராமத்தின் சில பகுதிகளும் மக்கள் மீள்குடியமர்விற்காக திறந்து விடப்பட்டுள்ளன.
இதன்படி நாகர்கோவிலில் பருத்தித்துறை-மருதங்கேணி பிரதான வீதியின் தெற்கு மற்றும் நாகர்கோவிலின் கடற்கரைப் பிரதேசம் அதாவது நாகர்கோவில் மேற்கு கிராமசேவையாளர் பிரிவின் ஒருபகுதி என்பவை மக்களின் மீள்குடியமர்வற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நாகர்கோவில் பிரதேசத்தில் இதுவரை சுமார் நூறு குடும்பஙகள் வரை மீளக்குடியமர்ந்துள்ளதாக பிரதேச செயலக தரப்புக்கள் தெரிவித்தன.
1996 ம் ஆண்டினில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளால் இந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்த போதிலும், தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள நாகர்கோவில் பிரதேசத்தில் இருந்து 2000ம் ஆண்டே முழுமையாக மக்கள் வெளியேறி இடம்பெயர்ந்தனர்.
உள்ளுராட்சி தேர்தல் பிரசாரத்துக்காக அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை: