வியாழன், 4 ஆகஸ்ட், 2011

யாழ் - கிளிநொச்சியில் அமெரிக்க கிறீன்கார்ட் விஸா கருத்தரங்கு

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் விஸா பிரிவு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற் தடவையாக கிறீன்கார்ட் விசா லொத்தர் தொடர்பிலான கருத்தரங்கை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை அநுராதபுரம் கூட்டுறவு சமூக நிலையத்திலும் 6ஆம் திகதி சனிக்கிழமை காலை கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை நிலையத்திலும் அன்று மாலை யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளினால் விளக்கங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் இதற்கான மொழிபெயர்ப்புகளும் வழங்கப்படும்.

இந்த லொத்தர் திட்டத்தின் மூலம் சில குறிப்பிட்ட நாடுகளில் பிறந்தவர்கள் சட்ட ரீதியாக ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். வருடாந்தம் பல இலங்கையர்கள் இதில் வெற்றி பெற்றறு அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற கருத்தரங்கு கொழும்பு திருகோணமலை மட்டக்களப்பு பொலநறுவை காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை: