சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப்பகுதியில் அமையப் பெற்றுள்ள நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி அரசனான சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் அதனை இன்றைய தினம் (3) திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும் யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னன் சிலையை மட்டுமன்றி அவருடைய மந்திரிமனை நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பவற்றை மக்களின் பயன்பாட்டுக்கேற்ற விதத்தில் அவற்றை புனரமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
அங்கு யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்னம் அங்கு நினைவுரையாற்றும் போது யாழ்.மாநகர சபையானது 120 வருடங்கள் பழைய வாய்ந்ததென்பதுடன் தற்போதைய முதல்வர் 13வது முதல்வராவர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சங்கிலிய மன்னனின் சரித்திரத்தை குறுவரலாறாக மூன்று மொழிகளிலும் சிலைக்கு அண்மையான பகுதியில் பொறிக்கப்படவேண்டுமெனவும் சிலை மட்டுமல்லாது மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதுடன் பண்பாடுகளை பாதுகாத்துக் கொள்வதும் அபிவிருத்தியாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பண்பாடுகளை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன் யாழ்ப்பாண கலை கலாசார பண்பாட்டு ரீதியில் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குரியவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் யாழ். செயலக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக