வியாழன், 4 ஆகஸ்ட், 2011

திட்டமிட்டபடி இன்று கூட்டமைப்பு – அரசு 10ஆம் கட்டப் பேச்சு!


அரசு – கூட்டமைப்பு 10ஆம் கட்டப் பேச்சுகள் திட்டமிட்டபடி இன்று இடம்பெறும். இதுவரை இடம்பெற்ற பேச்சுகள் திருப்திகரமாக இல்லாதபோதும் பேச்சுகளில் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று, 20 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிய நிலையில் கூட்டமைப்பு இந்தப் பேச்சுகளில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. அரசு – கூட்டமைப்பு பேச்சுகள் இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும்.
கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய எம்.பிக்களும், சட்டத்தரணி எஸ்.கனகேஸ்வரனும் கலந்துகொள்வர். சுரேஸ் பிறேமச்சந்திரன் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வாரா என்பது தெரியவரவில்லை. அரச தரப்பில் அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மற்றும் சச்சின் டி வாஸ் ஆகியோர் கலந்துகொள்வர்.
-நன்றி நெருடல் இணையம்-

கருத்துகள் இல்லை: