திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இலங்கை - உக்ரைன் நேரடி விமான சேவை நவம்பரில் ஆரம்பம்

கொழும்பிற்கும் உக்ரைன் தலைநகர் கிவ்விற்கும் இடையிலான நேரடி விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உக்ரேன் வர்த்தக மற்றும் முதலீட்டு சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹக்கீம் சம்சுதீன் தெரிவித்தார்.

இச்சேவையின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனிலிருந்து வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளை சேர்ந்த இரண்டு வேறுபட்ட தூதுக்குழுக்கள் இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் கூறினார். 


கருத்துகள் இல்லை: