வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பருத்தித்துறையில் கடல் நீர் உட்புகும் அபாயம்!(காணொளி இணைப்பு)

பருத்தித்துறையில் கடற்கரை பகுதி ஆழமாக்கும் பணி இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால் பாரிய மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் உடமைகளும், பழுதடையும் நிலை ஏற்படுகிறது. மீன்பிடிப் படகுகளும் இதனால் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கூறினர்.

கடலினை ஆழமாக்கிய பின்னர் தடுப்பு சுவர் முற்று முழுதாக கட்டப்படவில்லை எனவும் இதனாலயே பாரிய மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களால் இயன்றவரை தடுப்பு சுவரினை அமைத்து வருவதாகவும், எனினும் இப் பணியினை பூரணப்படுத்த முடியாதுள்ளது எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையை ஆழமாக்கும் பணிக்காக தங்களுக்கு இருபது மணித்தியாலங்களே சமாசத்தின் ஊடக ஒதுக்கப்படுகிறது, இருப்பினும் இருபது மணித்தியாலங்களுக்குள் குறித்த பணியினை செய்து முடிக்க முடியாதுள்ளது எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே மேலதிகமாக இன்னும் இருபது மணித்தியாலங்கள் தமக்கு தேவைப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உரிய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி தமிழ் சி.என்.என் 

கருத்துகள் இல்லை: