புதன், 10 ஆகஸ்ட், 2011

பெண்களுக்குத் தனியான பஸ்சேவை இன்று கொழும்பு கோட்டையில் ஆரம்பம்


பெண்களுக்கான தனியான பஸ் சேவை இலங்கையில் முதல் முதலாகக் கொழும்பில் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதனை இலங்கையின் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார வெல்கம ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் போக்குவரத்து சபை பஸ்களையே பயன்படுத்துகின்றனர்.
இதனால் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் பல்வேறு விதமான தொந்தரவுகளை எதிர்நோக்குவதாகவும், குறிப்பாக ஆண்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் பல் வேறுபட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்தே போக்குவரத்து அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பரீட்சார்த்தமாக முதலில் கொழும்பில் பஸ் வழி இலக்கம் 138 ல் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து புறக்கோட்டை வரை காலையிலும் மாலையிலும் இந்தப் பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
முதலாவது பஸ் சேவையைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார வெல்கம இன்று புதன்கிழமை காலை 7 .00 மணிக்கு கொழும்பு,  கோட்டையில் கொடியசைத்து ஆரம்பித்து வைப்பார்

கருத்துகள் இல்லை: