ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

யாழ்.பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தமிழில் பதிய வாய்ப்பு!

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளைத் தாமே தமிழில் பதிவு செய்து கொள்ளக்கூடிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த நேற்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் நிலையங்களில் காணப்படும் மொழிக்குறைபாட்டை நீக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கதான படிவங்களை பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.

தற்போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளைத் தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தீர்வு காணமுடியும். இடைத்தரகர்கள் இன்மையால் லஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்கள் நல்ல சேவையையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்பட்டும். மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!


நண்பர்களே, நேற்று மதுரையில் வேலாயுதம் பாடல் வெளியிட்டு விழா ரசிகர்களுக்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடல்களை வெளியிட்டு விழாவின் இறுதி பகுதியாக விஜய் பேசினார். அவர் பேசியது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் ரெகார்ட் செய்யப்பட்டதால் தரம் சற்று குறைவாக உள்ளது. அவர் பேச்சின் இறுதியில் வேலாயுதம் படத்தில் வரும் "சொன்னா புரியாது" என்ற பாடலை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.

தமிழக குழந்தைகளுக்கு விஜய், "நேரு" மாமாவாக இருக்காராம். தமிழகத்தை காக்க வந்த "காந்தி"யாம். அதாவது பரவாயிலைங்கோ, ஒருத்தரு பேசினாரு பாருங்க, தென்னகத்தின் "அன்னா ஹசாரே"ன்னு, எனக்கு மயக்கமே வந்திருச்சு. பேசுங்க புகழ் பாடி பேசுங்க, அதுக்காக இம்புட்டு ஓவரா பேசக்கூடாது. 


அமெரிக்காவில் 'ஐரேன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள ‘ஐரேன்’ சூறாவளி அபாயத்தினால் இலங்கையருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 20 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் தோன்றிய ‘ஐரேன்’ என்ற சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை நேற்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரேன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜினியா, மேரிலண்ட், வடகரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் பிரதான 5 விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம், தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0012023520355  என்ற தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

சனி, 27 ஆகஸ்ட், 2011

வானூர்தி பூ மழை பொழிய, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரேறித் திருவீதியுலா வந்தான் திருமுருகன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04.08.2011 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இன்றைய தினம் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

இத் தேர்த் திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, வானத்தில் இருந்து வானூர்தி பூ மழை பொழிய திருவீதியில் தேரேறிக் காட்சி தந்தான் நல்லூர்க் கந்தன்.

பறவக்காவடி, அங்கப்பிரதிஸ்டை, அடியழித்தல் என அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களைத் தேரடியில் நிறைவேற்ற, தேர் மீது அமர்ந்து ஆறுமுகக் கந்தன் அருள்பாலித்தான்.

அத்துடன் நல்லூர்க் கந்தனின் இவ் வருட மஹோற்சவத்தின் இறுதி நாளான நாளை தீர்த் தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





விண்டோஸ் 7 தரும் புத்தம் புதிய வசதிகள்


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்பறைகளை டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கோப்பறையில் மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில் எளிதாக அதில் வேலை செய்திட இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும்.
3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம் மிகத் தெளிவான துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி மடிக்கணணிகளில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம் அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம்.
எடுத்துக்காட்டாக முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கணணியிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால் பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர்.

PSD வகை கோப்புகளை எளிதாக திறப்பதற்கு


அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்(Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை(Image Editing) மென்பொருளாக இருக்கிறது.
புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. பொட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள்.
இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.
இவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும்.
அதனால் கணணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.
இந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது.
இதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
தரவிறக்க சுட்டி
அடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும்.
http://www.4shared.com/get/R9wH-POu/PhotoShop.html
உங்கள் கணணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவும்.
C:Program FilesPaint.NETFileTypes
இந்த கோப்பறையில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

உன் கண்களாலே செய்த கல்லறை!!



நான் தந்த மலரோ உன் கூந்தலில் இன்னும் வாடவில்லை
நீட்டி நின்ற காதல் மடலோ இன்னும் கசங்கவில்லை,
எழுதித்தந்த கவிதையின் ரசனை இன்னும் குறையவில்லை
நடந்துசென்ற சாலையோரம் நம் பாத தடங்கள் இன்னும் அழியவில்லை,
அதற்குள் சொல்லிப்போனாயடி என்னை மறந்திடுங்கள் என்று
கண்களைக்காட்டி என் இதயத்தை குடைசாயத்து உன் கண்களாலே செய்துவிட்டாயடி எனக்கு ஒரு கல்லறை........

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இலங்கையில் அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது! : ஜனாதிபதி


கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான பிரேரணை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்றும் நாட்டில் முழுமையாக ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முழு காரணமாக இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அதன்போது, அர்ப்பணிப்பை மேற்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்க நடவடிக்கை எடுத்தமையானது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியாது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய சட்ட திட்டங்கள் அநேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
1971 ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காதவிடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.
இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.

கனிணயில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு


கனிணியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
கனிணி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான்.
இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும்.
விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது.
தரவிறக்க http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

டெல்லியில் இன்று அன்னாவை சந்திக்கிறார் நடிகர் விஜய்-உண்ணாவிரதத்தில் பங்கேற்பு


டெல்லி: டெல்லியில் இன்று காலை அன்னா ஹஸாரேவை நடிகர் விஜய் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். பின்னர் மாலை வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார். சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார். இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கின் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் ( privacy controls )!


இன்று உலக அளவில் சமூக வலையமைப்பில் முன்னனியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துருக்கிறது பேஸ்புக். அதிகரித்துவரும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி பல்வேறு தனியுரிமைக் கடுப்பாடுகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றது.
தற்போது பேஸ்புக்கில் படங்கள், கருத்துக்களை இடுபவர்கள் அதனை யார் யார் பார்க்க வேண்டும் என்று தனியாக செட் செய்யலாம். புவியியல் அமைவிடங்களையும் குறிக்க முடியுமாம். இவை பயன்படுத்த எளிதானது என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் உடனான பேஸ்புக் தளம் இயங்கத் தொடங்குமாம்.

புதன், 24 ஆகஸ்ட், 2011

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு


அண்மையில் பயர்பொக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பொக்ஸ் 5இல் இருந்த ஆயிரக்கணக்கான குறைகளை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம், லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது.
http://www.mozilla.com/en-US/mobile/
எவ்வாறாயினும் பயர்பொக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது.
http://www.mozilla.com/en-US/firefox/features/

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அடுத்த ஆண்டு ஐபேட்-3 வெர்ஷன் அறிமுகம்: ஆப்பிள் திட்டம்


உலக அளவில் டேப்லெட் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் ஐபேட் டேப்லெட்டின் புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தரம் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர் கைகளை ஆப்பிள் ஐபேட் கட்டிப்போட்டுள்ளது.
மேலும், சந்தை போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களுடன் ஐபேட் புதிய மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஐபேட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமி்ட்டுள்ளது.
புதிய ஐபேட் வடிவமைப்பு பணிகள் முடிந்து சோதனை கட்டத்தில் இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபேட்-2 வெர்ஷனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், 2048*1536 பிக்செல் துல்லியத்துடன் கூடிய 9.7 இஞ்ச் தொடுதிரையுடன் ஐபேட்-3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், 15 லட்சம் ஐபேட்-3 டேப்லெட்டுகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விரைவில் வழங்குமாறு சப்ளையர்களிட் ஆர்டர் கொடுத்துள்ளது ஆப்பிள். இதனால், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஆப்பிள் ஐபேட்-3 தனது அழகையும், திறமையையும் வெளியுலகுக்கு காட்டும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மார்க்கெட்டில் புதிய ஆப்பிள் ஐபேட்-3 டேப்லெட் வழக்கம்போல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கருதப்படுகிறது.

5வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

லசித் மலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

212 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 71 ஓட்டங்களையும் சாமர சில்வா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஹட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாலிங்க மூன்றாவது தடவையாக ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட 5 போட்டிகளில் 3:2 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி தொடரினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

SnowFox YouTube Downloader: வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. 

இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. 

இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். 

இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில்(Facebook) கணக்கு இருக்க வேண்டும். 

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும். பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும். 

பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.

பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும். இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

தரவிறக்க http://www.facebook.com/

வரைதல் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையம்


வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.
வரைதலில் எல்லாம் திற‌மை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தளத்தை இணைய சித்திர பலகை என்று சொல்லலாம். வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பலகையையும் தந்து வரைவதற்கான தூரிகையையும் தருகிறது. வண்ணங்களையும் தான்.
வரையவும் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் இந்த பலகையும் தூரிகையும் வருகின்றன. அதன் பிற‌கு விருப்பம் போன்ற சித்திரத்தை வரைய வேண்டியது தான். வரைவது என்ற‌வுடன் ரவிவர்மா போலோ ஹுசேன் போலோ இருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை உங்கள் திற‌மைக்கேற்ப கோட்டோவியம் போல வரையலாம்.
வரைந்து முடித்தவுடன் அதனை சேமித்து ஒரு தலைப்பிட்டு சம்ர்பிக்கலாம். இவ்வாறு சமர்பிக்கப்படும் சித்திரங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெறுகின்றன. உங்கள் சித்திரமும் அதில் சேர்க்கப்படும்.
இந்த சித்திரங்களை பார்த்து ரசிப்பதோடு அவை பிடித்திருந்தால் படித்திருக்கிறது என தெரிவிக்க‌லாம். நண்பர்கள் வட்டத்திலும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் ரசித்த சித்திரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
கணணியிலும் இணையத்திலும் வரைவதற்கான வசதி இருக்கிறது என்றாலும் இந்த தளம் எளிதான இணைய சித்திர பலகையை வழங்குகிறது. அதனை ப‌யன்ப‌டுத்துவதும் சித்திரத்தை சேமித்து வைப்பதும் எளிதாக உள்ளது. நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
இங்கு சம‌ர்பிக்கப்படும் சித்திரங்களை பார்த்து ரசிப்பதும் சுவாரஸ்யமானது. சில கிறுக்கலாக இருந்தாலும் சில எளிமையான ஆனால் அழகான க‌ருத்தை முன்வைக்கின்றன. இணையத்தில் பகிர்தல் சார்ந்த சேவைகள் பிரபலமாக உள்ள சூழலில் வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இந்த தளம் சுவாரஸ்யமான‌து.
ஆனால் பெரிய அளவில் கருத்து பரிமாற்றதில் எல்லாம் ஈடுபட முடியாது. அதே நேரத்தில் விளம்பர‌ நோக்கிலான சித்திரங்க‌ளையோ ஆபாச சித்திரங்களையோ சமர்பிக்க கூடாது.
படைப்பு திறன் சார்ந்த சித்திரங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வரையவும் வழி செய்து அதனை வெளியிடவும் வழி செய்து பகிரவும் வழி செய்யும் இந்த தளம் வரைதலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பிடித்தமானதாகவே இருக்கும்.
இணையதள முகவரி

தகவல்களை சேமிக்க புதிய சாதனம் கண்டுபிடிப்பு


கோப்புக்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் தொழில்நுட்பம் வளர வளர மாற்றமடைந்து கொண்டு வருகின்றது.
இந்த வரிசையில் கணணி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித்தட்டினால் ஆன சிறிய சீ.டி போன்று காணப்படுத் இந்த புதிய சாதனத்தை விரைவில் நீங்களும் பயன்படுத்த முடியும்.
இந்த புதியசாதனம் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது: இந்த புதிய சேமிப்பு தட்டில் 50 GB வரை தரவுகளை சேமித்துக் கொள்ள முடியும்.
அலுவலகங்களில் பெரிய அளவிலான கோப்புகளை சேமிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் உறுதியான இந்த கண்ணாடித்தட்டில் தரவுகளை அழித்து சேமித்து வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்கள். இது மிகவும் உறுதியான ஒன்று எனவும் வரைவில் சந்தைக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்!

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, நாளை காலை 11 மணிக்கு. இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி.

எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.

இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் என்பதுதான் நிகழ்ச்சியின் தலைப்பு. இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகள், பாபாஜி குகைக் கோயில் அமைந்துள்ள புனிதமான இடம் மற்றும் அந்த சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை இந்த வீடியோவில் காணலாம். இது முழுக்க முழுக்க ரஜினி இடம்பெறும் வீடியோ என்பதுதான் ஸ்பெஷல்.

பாபாஜி குகைக் கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை ரஜினியின் நண்பர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோவில் காணலாம்.

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்....( படங்கள் இணைப்பு )

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்திருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை.










சனி, 20 ஆகஸ்ட், 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்


கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா.சம்பந்தன்  அதனை  ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.


கூகுளின் யூடியுப் போட்டியாக யாகூவின் மூவிப்ளெக்ஸ் அறிமுகம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகுள் தனது ஓன்லைன் வீடியோ தளமான யூடியுபில்(Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது.

யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகுளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணணியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும்.

கூகுளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள்.

மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே.

ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை.

தமிழ் கூட்டமைப்பின் முக்கிய முடிவு இன்று! எம்.பி.கள் கூடி ஆராய்ந்த பின் அறிவிப்பர்!- சுரேஷ் பா.உ.


அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்து அடுத்த அரசியல் நகர்வு குறித்து முடிவு செய்வர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசும், கூட்டமைப்பும் கடந்த 7 மாதங்களாகப் பத்து தடவைகளுக்கு மேல் சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேச்சு நடத்தியபோதும் ஆக்கபூர்வமான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
நடந்த பேச்சுகளில் அரச தரப்பு உறுதி அளித்தபடி எந்த விடயங்களும் நடைபெறவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. 30 வருடப் பிரச்சினைக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு கண்டுவிட முடியாது என்று அரசு கூறுகின்றது.
இதை அடுத்து தீர்வு குறித்த மூன்று முக்கிய கூறுகளைத் தெளிவுபடுத்தும்படி அரசுக்கு இருவார காலக்கெடுவை இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்பு வழங்கி இருந்தது.
அரசின் கட்டமைப்பு, மத்திய மற்றும் மாகாண அலகுகளுக்கு இடையிலான பகிர்வுகள் பங்கீடுகள், நிதி மற்றும் வரி அறவீடுகள் ஆகிய மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்துமாறே கூட்டமைப்புக் கேட்டிருந்தது.
இந்த மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்தினால் அடுத்த கட்டப்பேச்சுக்கு நாள் குறிக்கலாம். இல்லையேல் அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது.
ஆனால், அரசு இதற்கான பதிலைத் தரவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நகர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.

மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதன் பெயர் Amphibious 1000

இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது.

படகுகள், படகு வீடுகள், அரை நீர்மூழ்கி கட்டிடங்கள் என்று அசத்துகின்றனர்.

வதிவிடங்கள், அலுவலகங்கள், நவீன மரீனாக்கள் அமைக்கப்படுகின்றன.

ஹோட்டலின் மத்திய கோபுரத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்படுகின்றது.

80 அரை நீர்மூழ்கி கட்டிடங்களில் விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வகை கட்டிடங்களுக்கு ஜெலிஃபிஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை இரசிக்கக் கூடிய வகையில் அறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எஞ்சின்களுடன் கூடிய சிறிய ரக அலுமினிய படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தியே ஹோட்டல் வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

ஹோட்டல் நிர்மாணத்துக்கான திட்டத்துக்கான மொத்தச் செலவு 500 மில்லியன் டொலர் வரை ஆகுமென கணக்கிடப்பட்டு உள்ளது.









வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும் அணிகளுக்கிடையிலான மாபெரும் கிளித்தட்டுப் போட்டி


தமிழர் பாரம்பரிய அடையாளங்களைப் பேணுவதிலும் அவற்றை புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் தனது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு, மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை நடத்துவதில் பெருமையடைகின்றது.
தமிழர் பாரம்பரிய அடையாளங்களைப் பேணுவதிலும் அவற்றை புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் தனது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு, மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை நடத்துவதில் பெருமையடைகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகிய கிளித்தட்டு பல நூற்றாண்டுகளாக மருதநில வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களால் விளையாடப்பட்டு வந்த ஒன்று என்பதுடன், இன்று இது தமிழீழத்தின் தேசிய விளையாட்டுகளில் ஒன்றாக தமிழீழம் எங்கும் பரவலாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.
இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது இளையோர்கள் பலர் தமது பாரம்பரியம், அடையாளம், கலாசாரம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வங்காட்டி வருகின்றனர். அதனடிப்படையில் எமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்துவதற்கு நாம் எடுத்த முயற்சிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இளையோர் மத்தியில் இவ்விளையாட்டை பழகுவதிலும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டுவதிலும் ஆர்வம் காணப்படுகின்றது.
தமிழர்களாகிய நாம் ஒரு செழிப்பான பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்கள். அப்பாரம்பரிய அடையாளங்களை கால ஓட்டத்தில் அழிந்துவிடாது காத்து எமது அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துவதில் நாம் பெருமுயற்சி எடுத்து வருகின்றோம். குறிப்பாக சிறீலங்கா அரசு தமிழர்களின் பாரம்பரியத்தை சிதைப்பதில் மும்முரமாகச் செயற்பட்டு வரும் இக்காலகட்டத்தில், நாம் எமது பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சியைப் பன்மடங்காக்கி அவற்றை வளர்த்தெடுப்பதில் முன்னிற்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் இப்போட்டி நிகழ்வைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலும் பங்குபெறும் அணிகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் கிளித்தட்டுக்கான ‘தமிழீழ பாரம்பரிய கேடயம்’ எனும் வெற்றிக்கேடயம் ஒன்றை கனடா தமிழ் இளையோர் அமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அணிகளுக்கிடையிலான இப்போட்டி ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் அனைத்தும் தமிழர் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் வகையில் தமது அணிகளுக்குப் பெயரிடுவது என முடிவு செய்துள்ளன.
எமது இம்முயற்சி வெற்றியளிக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்கவும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு அனைவரவு ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.
கனடா தமிழ் இளையோர் அமைப்பு

மொபைல் ஊடாக தமிழ்வின் மற்றும் லங்காசிறி புதிய புரட்சி


24 மணிநேர அனைத்து செய்திகளையும் ஏனைய தகவல்களையும் தாங்கிவரும் லங்காசிறி மற்றும் தமிழ்வின் தனது புதிய பரிமாணமாக கையடக்கத் தொலைபேசிகளில் இணையத் தளத்தை இலகுவாக பார்க்க புதிய மொபைல் தளத்தை வெளியிட்டுள்ளது.
நாளுக்கு நாள் கையடக்கத் தொலைபேசியில் இணையத்தளங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தும் வரும் நிலையில் இவ்வாறான தளத்தை வெளியிட்டிருப்பது பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மிக வேகமாக தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளங்களை இலகுவாக பார்வையிட வசதியளிக்கப்பட்டுள்ள நிலையில் பாவனையாளர் ஆகிய நீங்களும் பார்வையிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இணைமுகவரி

புதன், 17 ஆகஸ்ட், 2011

193 தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்தியப்பிரமாணம்


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 193 உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கில் 25 உள்ளூராட்சி சபைகளில் 20 சபைகளை கைப்பற்றியிருந்தது.
யாழ்.மாவட்டத்தில் 16 சபைகளுக்கான தேர்தலில் 13 சபைகளை கைப்பற்றியதுடன், கிளிநொச்சியில் உள்ள மூன்று சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக கூட்டமைப்பு சார்பில் 16 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
அதாவது யாழ்.மாவட்டத்தில் 140 பேரும் கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளில் 22 பேரும் வெற்றிபெற்றிருந்தனர்.
இதனுடன் முல்லைத்தீவு துணுக்காயில் 7 பேரும் திருமலை மாவட்டத்தில் 8 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 11 பேருமாக கூட்டமைப்பு சார்பில் 193 பேர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

மரண அறிவித்தல்!

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா ஜெயந்திரன் அவர்கள் 15-08-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இளையாட்சி அவர்களின் அன்புப் பேரனும்,
இந்திராதேவி(வண்ணக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயசுதா(இலங்கை), ஜெயமதி(இலங்கை), ஜெயகரன்(லண்டன்), ஜெயலதா(இலங்கை), ஜெயசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முகுந்தன்(இலங்கை), புவனேஸ்வரன்(இலங்கை), சுரேஸ்வரன்(சுவிஸ்), சிவநந்தினி(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலங்கையில் வசிக்கும் சுமித்தா, மதுஷா, ஜெசிந்தன், மதுமிதா, சாருஜன், சன்யூ, மற்றும் ஹரிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

திரு அருளையா ஜெயந்திரன் மலர்வு : 4 யூலை 1945 — உதிர்வு : 15 ஓகஸ்ட் 2011


வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா ஜெயந்திரன் அவர்கள் 15-08-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இளையாட்சி அவர்களின் அன்புப் பேரனும்,
இந்திராதேவி(வண்ணக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயசுதா(இலங்கை), ஜெயமதி(இலங்கை), ஜெயகரன்(லண்டன்), ஜெயலதா(இலங்கை), ஜெயசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முகுந்தன்(இலங்கை), புவனேஸ்வரன்(இலங்கை), சுரேஸ்வரன்(சுவிஸ்), சிவநந்தினி(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலங்கையில் வசிக்கும் சுமித்தா, மதுஷா, ஜெசிந்தன், மதுமிதா, சாருஜன், சன்யூ, மற்றும் ஹரிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
ஜெயகரன் - மகன்
தொடர்புகளுக்கு
ஜெயசந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447413978331
ஜெயகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940231785
புவனேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774966997
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771532552
சுரேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783070644

இவரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை வேண்டுவோம்!

மின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்க ?

சென்ற ஆகஸ்ட் 4 அன்று கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது.

பொதுவாக நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை பார்க்கையில் அனுப்பியவர் பெயர், நாள் மற்றும் நேரம், மின்னஞ்சலின் தொடக்க சொற்கள் காட்டப்படும்.

இதனால் நாம் உடனே பார்க்க விரும்பும் மின்னஞ்சல்களுக்கு முன்னுரிமை கொடுத்து கிளிக் செய்து பார்க்கலாம். இதனால் இன்பாக்ஸில் ஒவ்வொரு மின்னஞ்சலாக கிளிக் செய்து அலைய வேண்டியதில்லை.

மின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இந்த புதிய வசதி தருகிறது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் வெப் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களான யாஹூ மற்றும் ஹாட் மெயில் ஆகியவை மெயில் தளத்தில் மூன்று பிரிவுகளைக் காட்டுகின்றன.

இடதுபுற பிரிவில் கோப்பறைகள், மின்னஞ்சல் செய்திகள் நடுவில் மற்றும் அஞ்சல்களைப் படித்துப் பார்க்க வலது ஓரத்தில் ஒரு பிரிவு எனக் கொண்டுள்ளன. இந்த மூன்றாவது பிரிவினை நீங்கள் விரும்பினால் செய்திகளுக்குக் கீழாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வாசிக்கும் பிரிவு(reading pane) நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதன் மூலம் வெகு வேகமாக நமக்கு வந்துள்ள அஞ்சல் செய்திகளை அவற்றைத் திறக்காமலேயே பார்த்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

இதனை ஜிமெயில் இப்போதுதான் சேர்த்துள்ளது. இதனை இயக்க ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து ஜிமெயில் லேப்ஸ் செல்லவும். அங்குள்ள சர்ச் கட்டத்தில் Preview Pane என டைப் செய்தால் உங்களுக்குத் திரையில் அந்தப் பிரிவு காட்டப்படும். இதனை முதலில் Enable செய்திட வேண்டும்.

பின்னர் இது எந்த பக்கத்தில், இடது/வலது இருக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம் அல்லது இன்பாக்ஸுக்குக் கீழாகக் கூட இருக்கும்படி செட் செய்திடலாம். இத்துடன் ஒரு மின்னஞ்சல் செய்தியினை அதிக பட்சம் எத்தனை விநாடிகள் பார்க்க விருப்பம் என்பதனையும் செட் செய்திடலாம். மாறாக நிலையில் இது மூன்று விநாடிகள் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு செட் செய்து ஜிமெயில் இன்பாக்ஸ் சென்றவுடன் முன் தோற்றப் பிரிவு காட்டப்படும் என எண்ண வேண்டாம். ஏற்கனவே உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுவிடுமே என அஞ்ச வேண்டாம்.

நீங்கள் விரும்பினால் மட்டுமே காட்டப்படும். இன்பாக்ஸ் வலது மேல் மூலையில் ஒரு பட்டன் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால் பல விருப்பங்கள் காட்டப்படுகின்றன.

வழக்கமான லே அவுட் அல்லது இந்த முன் தோற்றலே அவுட் இவற்றில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். வழக்கமான லே அவுட்டைத் தேர்ந்தெடுத்தால் பழையபடி தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

திரைக்குக் குறுக்காக அல்லது நெட்டுத் தோற்றம் என எந்த வகையில் இது காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்து கிளிக் செய்து அமைக்கலாம். பிரிவின் அகலத்தையும் விரித்து, குறைத்து அமைக்கலாம்.

பிரிவு ஏற்படுத்தப்பட்டுப் பார்த்த பின்னர் இதே பட்டனை அழுத்தி No Split என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால் இந்த பிரிவு மறைந்திடும். இந்த முன் தோற்றக் காட்சி இதுவரை ஜிமெயிலில் இல்லாத ஒன்றை இப்போது தந்துள்ளது.