வெள்ளி, 24 ஜூன், 2011

சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தின் அன்கரேஜ் பகுதியில் சற்று முன்னர் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இந்தப் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

அன்கரேஜ் பகுதியில் இருந்து மேற்காக ஆயிரம் மைல் தூரத்தில் பசுபிக் கடல் பிராந்தியத்திலேயே இந்தப் பூமி அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. 7.4றிச்டர் இளவு கொண்டதாக இது பதிவாகியுள்ளது.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பூகம்பம் ஏற்பட்ட 800 மைல் சுற்றளவு கொண்ட பிரதேசத்துக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான பூமி அதிர்வைத் தொடர்ந்து 7.2 றிச்டர் அளவிலான தொடர் அதிர்வொன்றும் பதிவாகியுள்ளது.-நன்றி தமிழ் சி என் என் இணையம்-

கருத்துகள் இல்லை: