குருநகர் புனித யாகப்பர் ஆலயத்துள் யேசுவை அறைந்து இருக்கும் சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடம் சிலுவை அடையாளத்துடன் ஒளிர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட அடியார்கள் புனித யாகப்பர் ஆலயத்தின் இவ்வதிசயத்தினைப் பார்வையிடுவதற்காக தினமும் ஆயிரமாயிரம் பேர் வந்து குவிகின்றனர்.
இவ்வாலயத்தின் வருடாந்த பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வருடம் ஆலயம் கட்டப்பட்டு, அபிசேகம் செய்யப்பட்ட 150ஆவது ஆண்டு விழா மிக விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆலயத்துள் ஜீபிலி ஆண்டை கொண்டாடும் முகமாக பல்வேறு திருத்த வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆலயத்துள் வைக்கப்பட்டிருந்த சிலுவை மரம் இருந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அந்த சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே சிலுவை அடையாளத்தை காட்டும் இளம் சிவப்பு நிறக் காட்சி தென்படுகிறது.
மாபிள் பதிக்கப்பட்டுள்ள மேற்படி இடத்தை பல தடைவை அழுத்தி துடைத்தும் அந்த காட்சி அழியாமல் இருந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.-நன்றி தமிழ் சி.என்.என்.இணையம்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக