வியாழன், 30 ஜூன், 2011

நடக்கும் அதிசய மீன்!!!

மீன்கள் நீந்தும் என்பது சின்னக்குழந்தைக்கு கூட தெரிந்த உண்மை. அதே போல் மீன்கள் பறக்கும் என்பதும் பலர் அறிந்த செய்தி ஆனால் ஏன்சல் மீன் என அழைக்கப்படும் மீனினம் ஒன்று கடலின் அடியில் உள்ள நிலப்பரப்பில் நடந்து செல்கின்றதாம். ஒருவேளை நீச்சல் அடித்து களைத்து விட்டதோ என்னமோ! இது தனது செட்டைகளை கால்களாக பயன்படுத்தி நடக்கையில் நான்கு கால்களால் நடப்பதை போன்று அமைந்துள்ளது. இதனை புகைப்படக்கலைஞர்கள் படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.நன்றி மனிதன் இணையம் 

புதன், 29 ஜூன், 2011

Facebook VS Google +VS Skype சரியான போட்டி! (.வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

உலகின் பிரபல சமூக இணைப்பு இணையத் தளங்களின் முதல்வனான பேஸ் புக்குக்கு போட்டியாக அறிமுகம் ஆகின்றது கூகுள் பிளஸ்.

கூகுள் நிறுவனத்தின் ஒரு வருட விடா முயற்சியின் பலனாக கூகிள் பிளஸ் வருகின்றது.

தற்போது கூகுள் பிளஸ் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் இணைய பாவனையாளர்களின் பயன்பாட்டுக்கு விடப்படும். 

பேஸ் புக்கில் காணப்படுகின்ற வசதிகளுக்கு மேலதிக வீடியோ சட்டிங் வசதி கூகுள் பிளஸில் சேர்க்கப்பட்டு உள்ளது. 

இதனால் ஸ்கைப் நிறுவனத்துக்கும் இது போட்டியாக அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வால் முளைத்த முட்டை

இலங்கையில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதுக் கிராமத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நஜிமா மிர்சா என்பவரின் இல்லத்தில் மிகவும் அதிசயமான முட்டை ஒன்றை கோழி ஒன்று இட்டு உள்ளது. 

முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்கின்றமைக்கு மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.-மேலதிக படங்கள் தமிழ் சி.என்.என்.இணையத்தில்-

புதிய அச்சுறுத்தல்கள்!


ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன.

எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது.

மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்:

பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன. இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம்.

அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன. எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும்.

2.நம்மை செயல்படாமல் வைத்தல்:

சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன. அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது. ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன.

3.தொடரும் நாசம்:

ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன.ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.

4. புதிய அறிவுரைகள்:

வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும்.

ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும். ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள்.

மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும். ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.-நன்றி jaffnawin இணையம்-

செவ்வாய், 28 ஜூன், 2011

உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் மன உளைச்சல்


மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடி, உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் பாதிக்கின்றது என்று தெரிவிக்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு. தாம்பத்யத்தின் போது கணவன் மனைவி இருவரும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும். களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் கணவன் இருக்கும் போது மனைவி உறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்தாலோ, மனைவிக்கு இஷ்டமில்லாத சமயத்தில் கணவன் உறவுக்கு அழைத்தாலோ அது சிறப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

இனப்பெருக்கத்தை தடுக்கும் மன உளைச்சலுக்கு காரணமான ஹார்மோன் அட்ரீனலின் சுரப்பியில் சுரக்கிறது. இது விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோனை தடை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஹார்மோனையும் சுரக்கச் செய்வதாக கூறி அதிர்ச்சியடைய வைக்கிறது அந்த ஆராய்ச்சி. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மன அழுத்தம் மூலம் சுரக்கும் இனப்பெருக்கத் தடை ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆணிடம் சுரக்கும் டெஸ்ரோஸ்டிரான் மற்றும் பெண்ணின் ஓவரிகளில் சுரக்கும் ஈஸ்ரோஜன் அளவினையும் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப்படைகிறது. இனப்பெருக்க ஈடுபாடும் குறைந்து போகிறது. இதனால் கருத்தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாபவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கிறது.

மிருகங்களுக்கும் மனஉளைச்சல்

2000 மாவது ஆண்டில்தான் இந்த இனப்பெருக்கத்தடை ஹார்மோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறவைகளில் மட்டுமே காணப்பட்ட இந்த ஹார்மோன் தற்போது பாலுட்டிகளிடமும், மனிதர்களிடமும் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடைத்துவைத்து வளர்க்கப்படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெருக்கச் செயல்களில் ஈடுபடுவது பயனற்றது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஏனெனில் ‘வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெருக்கச் செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள்தொகையை அதிகரிக்கிறார்கள்’ என்பது மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆராயும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் மனதில் உற்சாகம் நீடிக்கும் திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

உறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது. தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே தாம்பத்ய உறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான். அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவில் ஈடுபடுவது மனதில் உற்சாகத்தை நீடிக்கச்செய்யும்-நன்றி jaffnawin இணையம்-

கட்டி அணைத்து... முத்தம் ... கொடுத்து....

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்து போய் இருந்த 16 வயது பையன் ஒருவர் உயரிய பாலம் ஒன்றில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் என்று மிரட்டிய சம்பவம் சீனாவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது. எவரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை உடைமையில் வைத்துக் கொண்டு மிரட்டினார் பையன்.

பொலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது வந்து சேர்ந்தார் 19 வயது இளம் யுவதி ஒருவர். பையனின் காதலி என்று சொல்லிக் கொண்டார்.
பையன் நின்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பையனுடன் பேச்சுக்கள் நடத்தினார். திடீரென்று பையனை கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்து வேகமாக செயல்பட்ட பொலிஸார் பையனை அலக்காக தூக்கிச் சென்றனர்.பையன் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுப்பட்டார். முத்தம் கொடுத்த யுவதியோ சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். சம்பவங்களுடன் கூடிய காட்சிகள் இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளன.


திங்கள், 27 ஜூன், 2011

ஒளிர்கிறது சிலுவை: யாழில் அதிசயம்!


குருநகர் புனித யாகப்பர் ஆலயத்துள் யேசுவை அறைந்து இருக்கும் சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடம் சிலுவை அடையாளத்துடன் ஒளிர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அடியார்கள் புனித யாகப்பர் ஆலயத்தின் இவ்வதிசயத்தினைப் பார்வையிடுவதற்காக  தினமும் ஆயிரமாயிரம் பேர் வந்து குவிகின்றனர்.

இவ்வாலயத்தின் வருடாந்த பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வருடம் ஆலயம் கட்டப்பட்டு, அபிசேகம் செய்யப்பட்ட 150ஆவது ஆண்டு விழா மிக விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலயத்துள் ஜீபிலி ஆண்டை கொண்டாடும் முகமாக பல்வேறு திருத்த வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆலயத்துள் வைக்கப்பட்டிருந்த சிலுவை மரம் இருந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அந்த சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே சிலுவை அடையாளத்தை காட்டும் இளம் சிவப்பு நிறக் காட்சி தென்படுகிறது. 

மாபிள் பதிக்கப்பட்டுள்ள மேற்படி இடத்தை பல தடைவை அழுத்தி துடைத்தும் அந்த காட்சி அழியாமல் இருந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.-நன்றி தமிழ் சி.என்.என்.இணையம்-

ஞாயிறு, 26 ஜூன், 2011

இலவசமாக இணையத் தளங்களை ஆரம்பிக்க!

இன்றைய இணைய உலகில் இணையத்துடன் இணையாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த வகையில் சிலருக்கு அவர்களின் மனதில் சில ஆதங்கங்கள் இருக்கும்,எங்களுக்கென்று ஒரு வலைப்பதிவு உருவாக்கினால் என்ன என்று,அடுத்து நாமும் நமக்கு தெரிந்தவற்றையும் எழுதி மற்றவர்களோடு பகிர்ந்து எமது செய்திகளையும் அனைவருக்கும் அறிய செய்ய வேண்டுமென்ற ஆவல்,எனவே நண்பர்களே உங்களின் கனவுகளை நிஜமாக்க நீங்களும் உங்களுக்கென்ற ஒருபக்கத்தை உருவாக்கினால் என்ன?ஆம் உருவாக்குங்கள் இதோ அதற்கான பக்கங்கள்.....(இலவச இணைய பக்கம் உருவாக்குவதற்கு நிறைய பக்கங்கள் இருந்தாலும் அவற்றில் சில)


01,   Blogger.com

02.  Wordpress.com

03.  typepad.com

04.  Get Free co.cc Domain Name

அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்

புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 

உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசன் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. 

இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. 
மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. 

இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை உருவாக்குகின்றன. 

ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன.

பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.-நன்றி தமிழ் சி என் என் இணையம்-


வெள்ளி, 24 ஜூன், 2011

இனி எந்தப் பெயரிலும் Domain உருவாக்கலாம்

.com .net . in உங்கள் வெப்‌ஸைட் பெயரை பார்த்து என்று கண்கள் சோர்வாகிவிடானவா ? இனி உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரிலோ உங்கள் வெப்‌ஸைட் டொமைன் பெயரினை அமைத்துக் கொள்ளலாம். 

இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

அப்படியானால் உங்கள் நிறுவனத்தின் பெயரை கொண்டு முடியும் வெப்‌ஸைட் பெயரினை நீங்களே தேர்வு செய்யலாம். உதாரணமாக tamil.movie, bikes.apache cars.suzuki , laps.dell என்று பெயரை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். 

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. 

விண்டோஸ் ஓபரேடிங் சிஸ்டத்தை லாக் செய்வதற்கு

கணிணி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை சார்ந்தே உள்ளது. 

இதற்கு காரணம் கணிணி பயனாளர்கள் பெருமளவில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதே காரணம் ஆகும். 

இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்யும் வசதி இல்லை. 

பொதுவாக பயனர் கணக்கு துவங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும். 

அந்த கணிணியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணிணிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. 

அவ்வாறு உள்ள கணிணிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம். சில நேரங்களில் ஓபரேட்டிங் சிஸ்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம். 

அதுபோன்று ஓபரேட்டிங் சிஸ்டத்தினை லாக் செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr. 

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது போர்டபிள் அப்ளிகேஷன் ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளடவும். 

கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் எந்த போர்மட்டில் இயங்குதளத்தை லாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் லாக் செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது லாக் செய்யப்படும். 

நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை லாக் செய்தால் கடவுச்சொல் இட்டால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். USB மூலமாக லாக் செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். 

இவ்வாறு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்வதன் மூலமாக பிறர் நமது கணணியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே லாக் செய்ய முடியும்.

சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தின் அன்கரேஜ் பகுதியில் சற்று முன்னர் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இந்தப் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

அன்கரேஜ் பகுதியில் இருந்து மேற்காக ஆயிரம் மைல் தூரத்தில் பசுபிக் கடல் பிராந்தியத்திலேயே இந்தப் பூமி அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. 7.4றிச்டர் இளவு கொண்டதாக இது பதிவாகியுள்ளது.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பூகம்பம் ஏற்பட்ட 800 மைல் சுற்றளவு கொண்ட பிரதேசத்துக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான பூமி அதிர்வைத் தொடர்ந்து 7.2 றிச்டர் அளவிலான தொடர் அதிர்வொன்றும் பதிவாகியுள்ளது.-நன்றி தமிழ் சி என் என் இணையம்-

வியாழன், 23 ஜூன், 2011

அப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான iPhone 5 செப்டம்பர் முதல் விற்பனைக்கு!

அதி உயர் காட்சித் தெளிவு கொண்ட கெமரா, மென்பொருள்களை மிக வேகமாகத் தரவிறக்கம் செய்யக்கூடிய ஆற்றல் மிக்க சிப் என்பனவற்றுடன் அப்பிள் இன் iCloud தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய iPhone 5 செப்டம்பர் மாதத்தில் சந்தைக்கு வருகின்றது. 

இது கூகுள் இன் ஸ்மார்ட் போன் உடனேயே சந்தையில் போட்டியைஎதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவான கம்பியூட்டர் சிப் மற்றும் அதி முன்னேற்றகரமான கெமரா,அதி உயர் படத் தெளிவு கொண்ட காட்சித் திரை என்பனவே இதன் சிறப்பம்சங்களாக இருக்கும். 

அப்பிள் நிறுவன உற்பத்திகளில் மிகக் கூடுதலான விற்பனை கொண்டது  iPhone வகைகளே. அந்த வகையில் புதிய அறிமுகம் இந்தத் தொலைபேசி விற்பனையை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள்  iPhone 5 அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் விற்றுத் 
தீர்ந்ததும் ஒரு சிறப்பாகும்.

புதன், 22 ஜூன், 2011

மொழிபெயர்ப்பில் கூகிள் நிறுவனம் தமிழிலும் சாதனை!

உலகில் 63 மொழியில் உள்ள  ஆக்கங்களை தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை 63 மொழிகளிலும் மொழிபெயர்பு செய்யும் வசதி உருவாகி உள்ளது. 

கூகிள் நிறுவனத்தின் மொழி மாற்றம் செய்யும் பகுதியில் இதனை கூகிள் நிறுவனம் இணைத்துள்ளது.

இதன்மூலம் உலகில் தமிழ்மொழி கணினி உலகத்தில் புதிய வளர்ச்சி படி நிலையை அடைந்துள்ளது. 

விசேடமாக கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வலயமைப்பு இலங்கை  தமிழருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் மொழி மாற்றப்பக்கத்திற்குச் செல்லமுடியும்http://translate.google.com/?sl=en

உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக phone களுக்கு call செய்யலாம்..



இப்பொழுது முற்றிலும் இலவசமாக உங்கள் மொபைலில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்,

இதற்கு உங்களிடம் 3G வசதி(வீடியோ கால் வசதி) கொண்ட நோக்கியா or iphone மொபைல் இருக்கவேண்டும் (3G நெட்வேர்க் இருக்கவேண்டிய அவசியம் இல்லை),

உங்கள் மொபைலில் GPRS வசதியை activate செய்து அதன் பின்பு உங்கள் மொபைலில் இருந்து http://www.fring.com/ என்ற இணையத்தளத்துக்கு சென்று fring என்ற mobile application ஐ டவுன்லோட் செய்க.பின்பு ஏதாவது voip account ஒன்றை registrar செய்ய வேண்டும். (உதாரணமாக voipcheap , voipwise , smartvoipjumblo). பின்பு உங்கள் மொபைல் இல் நீங்கள் டவுன்லோட் செய்த fring ஐ open செய்து உங்களுக்கென்று ஒரு account ஐ registrar செய்க. பின்பு முறையே


option-> setting -> configure service -> SIP -> other -> user ID and Password ஐ type செய்து proxy address என்ற இடத்தில் proxy address ஐ type செய்ய வேண்டும் (உதாரணமாக sip.voipcheap.com , sip.voipwise.com , sip.smartvoip.com , sip.jumblo.com ).

பின்பு ok கொடுத்து main மெனுவிற்கு சென்று option -> setting -> show phone contact ஐ select செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் save செய்துள்ள contact number களின் list உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் யாருக்கு call செய்ய வேண்டுமோ அந்த number ஐ select செய்து option -> call -> SIP call ஐ select செய்யுங்கள். உங்களின் மொபைல் இல் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்படுவதை மொபைல் இன் screen இல் காணலாம்.....

NOTE: voip account களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.....
voip account பற்றிய மேலதிக விபரங்களுக்கு
click hear--> voipcheap , voipwise , smartvoip , சும்ப்லோ

சனி, 18 ஜூன், 2011

ஆலய தோற்றம்!


வற்றாப்பளை அம்பாள்.

Toshiba Tablet Gets Formal Introduction, And A Name

Today the highly anticipated Toshiba Tablet got a formal introduction into the market, and finally, a name: the Thrive. Rather than trying to put out the “thinnest” or “lightest” tablet on the market, Toshiba’s Thrive is all about usability, according to the manufacturer. Sporting a 10.1-inch display, the Thrive will ship with standard Android 3.1 Honeycomb.
In terms of specs, that 10-inch LED backlit display boasts a resolution of 1280×800 pixels, and comes with Toshiba’s Adaptive Display and Resolution+ video enhancement technologies, which make standard definition video playback a much more enjoyable and crisp experience. Under the hood, the Toshiba Thrive touts an Nvidia Tegra 2 dual-core 1GHz processor, with 1 GB of RAM.
As far as hardware is concerned, this tablet definitely differentiates itself from an ever-growing pack of other fledgling Android slates. This is the first tablet I’ve seen that has a removable back cover, so you can carry around a secondary battery for long stays away from an outlet. The back cover is also customizable, in that it comes in a number of different colors such as pink, lavender, green, navy, and standard silver and black.
Another differentiator for the Thrive is its host of various ports, including a full-size USB 2.0, HDMI and a full-sized SD card slot, so users with the 8GB model can boost storage with a 32 GB SD card. The USB, HDMI, and mini-USB ports are all hidden beneath a rubber cover. The Thrive sports a 5-megapixel rear camera and a 2-megapixel front-facing camera for video chat. Along with Toshiba’s video enhancement technology, the Toshiba Thrive also ships with audio enhancement technology. I played around with the settings a bit during my hands-on and definitely noticed a BIG difference between the standard sound coming from the device’s dual stereo speakers and the audio playback with Toshiba’s audio enhancement technology.

வெள்ளி, 17 ஜூன், 2011

வணக்கம்

வணக்கம் அனைவருக்கும்!விரைவில் புதுப்பொலிவுடன் உங்களின் றம்போ இனிய புதிய தகவல்களுடன் வருவான்.