செவ்வாய், 4 மார்ச், 2014

பளை நகரில் யாழ்தேவியை வரவேற்ற தமிழர் சேனை











கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்டபட புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் உதவியுடன் புகையிரதப் பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய பணிகள் நிறைவடைந்து ஓமந்தையிலிருந்த கிளிநொச்சி நோக்கிய சேவை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய சேவைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய இன்று காலை கிளிநொச்சியில் இருந்து சேவைகள் ஆரம்பமாகின.

கருத்துகள் இல்லை: