பருத்தித்துறையில் இருந்து கேவில் ( வடமராட்சி கிழக்கு ) வரையில் நடைபெறும் பஸ் சேவையில் தினமும் கஸ்ரங்களை இப் பிரதேச வாழ் மக்களும் வெளியிடத்து மக்களும் எதிர்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக தனியார் சேவை வழங்குனர்கள் பாடசாலை நாட்களில் சீரான சேவையை வழங்கிவிட்டு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சீரற்ற சேவையை வழங்குவது மிகவும் வேதனைக்குரிய விடயம். மேலும் இலங்கை போக்குவரத்து சபை வழங்கும் சேவை ஓரளவு பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் திருப்தி தரும் வகையில் இல்லை . குறிப்பாக சேவை வழங்கும் வாகனங்கள் பயணிகளுக்கு ஏற்ற வகையில் தரமானதாக இல்லை . அடிக்கடி பழுதாகும் நிலையில் இருக்கும் வண்டிகளே சேவையில் ஈடுபடுகின்றன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் இதர பயணிகளும் இடர்களை எதிர்கொள்கின்றார்கள் . நேற்றையதினம் ( 3/3/2014) கேவில் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட பேரூந்து குடத்தனை 6ம் கட்டை பகுதியில் வாகன சில்லு காற்று போனதால் பயணிகள் பொடிநடையாக செல்லவேண்டி ஏற்பட்டது. அதேபோல் இன்று காலை 7 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து கேவில் நோக்கி புறப்பட்ட பேரூந்து 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலய அருகாமையில் காற்று போய் நின்றது .பெருமளவான ஆசிரியர்கள் இக்கட்டான நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. எந்தவொரு மாற்று ஏற்பாடுமில்லா நிலையால் பயணிகள் செய்வதறியா நிலைமை காணப்படுகின்றது .எனவே சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து செயற்பட்டு தீர்வை ஏற்படுத்தி முன்னேற்றினால் நன்று . ஆனால் அது எப்போது?
திங்கள், 3 மார்ச், 2014
தீர்வு கிடைக்குமா?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக