சனி, 1 மார்ச், 2014

பருத்தித்துறை நகரசபை மரக்கறி வியாபாரிகள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு




01.03.2014 - சனிக்கிழமை

பருத்தித்துறை நகர சபையின் கீழுள்ள பொதுச் சந்தை மரக்கறி வியாபார நடவடிக்கைகளை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

பருத்தித்துறைப் பகுதிக்கு இன்றைய தினம் (01) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, மரக்கறி வியாபாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், அவர்களது பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதனிடையே, முன்னர் மரக்கறி சந்தை நடைபெற்று வந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இதன்போது, ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பி.யின் கரவெட்டிப் பிரதேச இணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை: