வெள்ளி, 21 மார்ச், 2014

எங்களின் மக்கள் தேவைகள் நிச்சயமாக மத்திய அரசூடாக நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் ( நாகர்கோவில் மக்கள் சந்திப்பில் தோழர் ரங்கன் ) 21/03/2014








இன்று மாலை 4 மணியளவில் மேற்படி சந்திப்பு நாகர்கோவில் மேற்கு பகுதியில் கடற்தொழிலாளர் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கரையோர பொறுப்பாளர் குமார் அவர்களும் கலந்து கொண்டார் ,தொடர்ந்து மக்கள் மத்தியில் கருத்துரை வழங்கிய தோழர் ரங்கன் " மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நாகர்கோவில் கிராம தேவைகள் நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றி தருவோம். அத்துடன் உங்களின் கிராமத்துக்கான மின் விநியோக செயற்பாட்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது விரைவாக விநியோக செயற்பாட்டுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் நடைபெறும் எனவும்.வட மாகாண சபை வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றும் சபையாக உள்ளதே தவிர மக்களுக்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் ஆறு மாதங்களாக நிறைவேற்ற வில்லை என்பதையும் தெளிவுபடுத்தி கூறியதோடு மக்களாகிய நீங்கள் ( தேசியம் பேசுபவர்களால் )ஏமாற்றப்பட்டதை நீங்களாகவே புரிந்து கொள்ளுவீர்கள் ஆனாலும் எங்களின் செயற்பாடுகள் திட்டமிட்டபடி மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ளப்படும் .அத்தோடு உங்களின் தேவைகள் உரியவாறு உங்களை வந்தடைய மத்திய அரசாங்கத்தூடாக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் கூறினார். இச்சந்திப்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உடனடியாகவே வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: