புதன், 17 அக்டோபர், 2012

பருத்திதுறைக்கு பாரிய குழாய் நீர் திட்டம்


674 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பருத்திதுறைக்கு பாரிய குழாய் நீர் வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் அமரனாத அபயகுணசேகர தெரிவித்துள்ளார்.
பருத்திதுறையில் வாழும் மக்கள் குடி நீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கிணற்று நீரை சார்ந்துள்ளனர். இங்கு ஏறத்தாழ 50%வீதமான பிரதேசத்தில் கிணற்று நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் அவர்களது அண்டிய பிரதேசங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்டும் இத் திட்டத்தின் மூலம் இப் பிரதேச மக்களின் வாழ்வில் சிறந்த மாற்றம் ஏற்படும். யுத்தத்தின் போது பாதிப்படைந்த குடிநீர் வழங்கல் திட்டத்தை புனரமைக்க யுத்த நிறைவுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் அண்ணளவாக இங்கு வாழும் 22,000 மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதெ இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன நிதியுதவி வழங்குகின்றன. Thanks defence.lk

கருத்துகள் இல்லை: