பொது மக்களுக்கிடையேயான புரிந்துனர்வை கட்டியெழுப்பும் நோக்குடனும், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்குடனும், இலங்கை இராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவினால் கடந்த செப்டம்பர் மாதம் வடமராட்சியில் காற்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையேயான ஓர் காற்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 11 அணிகள் பங்குபற்றின. இப் போட்டிகள் வடமராட்சி உடுத்துரை செந்தமிழ் மைதானத்தில் இடம்பெற்றன. இதன் இறுதிச்சுற்று, ஆளியவாலை கழகம் மற்றும் உடுத்துரை பாரதி கழகம் ஆகியவற்றிக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.05) இடம்பெற்றது.
இறுதி ஆட்டத்தின் போது ஆளியவாலை கழகம் உடுத்துரை பாரதி கழகத்தை 5:2 என்ற கோல் வித்தியாசத்தில் பெற்றிகொண்டு, வெற்றிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது. வெற்றிபெற்ற அணியில் தேசிய அணி வீரரும் ஜனாதிபதி விருது பெற்றவருமான முத்துக்குமார் நகுலேஸ்வரன் (27) என்பவரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி ஆட்டத்தின் போது ஆளியவாலை கழகம் உடுத்துரை பாரதி கழகத்தை 5:2 என்ற கோல் வித்தியாசத்தில் பெற்றிகொண்டு, வெற்றிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது. வெற்றிபெற்ற அணியில் தேசிய அணி வீரரும் ஜனாதிபதி விருது பெற்றவருமான முத்துக்குமார் நகுலேஸ்வரன் (27) என்பவரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கில் உள்ள உடுத்துரை பிரதேசமானது, கடந்த பயங்கரவாத நடவடிக்கைகளின் போது முற்றாக அழிவடைந்திருந்ததுடன், கனிசமான கண்ணிவெடிகளும் இங்கு பொருத்தப்பட்டிருந்தன. தற்போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் அப் பிரதேசவாசிகள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் சுமூக வாழ்வுக்காக இராணுவத்தினரால் பல நலன்புரித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் இறுதிப்போட்டியில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். போட்டியில் வெற்றிபெற்ற கழகத்திற்கும், இரண்டாம் இடத்தைப் பெற்ற கழகத்துக்கும் பல பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இப் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து அணியினருக்கும் காற்பந்துகளும் வழங்கப்பட்டன.
இவ் இறுதிப் போட்டியில் வணக்கத்துக்குரிய பாதிரியார் கே.ஜேசுரத்தினம், பாதிரியார்.கே.ஜஸ்டின், பலாலி அம்மன் கோவில் சதீஸ்வரன் குருக்கள், 55ஆவது படைப்பரிவின் பொதுக் கட்டளை அதிகாரி அஜித் விஜயசிங்க, அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
thanks.defence.lk |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக