கையடக்கத் தொலைபேசிகளை சுத்தமாக பயன்படுத்தாவிடின் மைற்றா பரவும் அபாயம்
[ வெள்ளிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2012, 07:46.57 AM GMT ]
இலங்கையர் ஒருவரின் காதில் இருந்து மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தாய்வான் பிரஜை ஒருவரின் காதலிருந்தும் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்தே பொரளை பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வயோதிபர்கள் மற்றும் உடற்தூய்மை குறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களின் காதுகளில் மைற்றாக்கள் பரவுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக காதுகளில் உபாதை அல்லது செவிபுலன் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சுமார் 200 கையடக்கத் தொலைபேசிகளிலும் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய தரத்துடன் சுத்தமாக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்து வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக