புதன், 7 நவம்பர், 2012

வடமராட்சி கிழக்கிற்கு லக்ஸபானா மின்சார இணைப்பை ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் உதயன் தொடக்கி வைத்தார்


07.11.2012  - புதன்கிழமை

வடமராட்சி கிழக்கிற்கு லக்ஸபானா மின்சார இணைப்பை ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் உதயன் தொடக்கி வைத்தார்.

முப்பது வருடகாலத்திற்கு பின்னர் வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேசத்திற்கு லக்ஸபான மின்சாரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் நடைபெற்றது.

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மின் விநியோகத்தை தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி பிரதேச அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் பொன்னையா, இலங்கை மின்சார சபையின் நெல்லியடி பொறுப்பதிகாரி, மின்பொறியலாளர் அருளானந்தம் ஆகியோரும்  உடனிருந்தனர்.                                                                                                                                          

கருத்துகள் இல்லை: