புதன், 5 பிப்ரவரி, 2014

இவர் என்ன சொல்கின்றார் ?

இன்று பல இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த செய்தி " வடமராட்சி கிழக்குக்கான மின் வழங்கலில் அசமந்த போக்குடன் அதிகாரிகள் " ஆனால் இதிலும் குறிப்பாக இவர் கூறி இருப்பது " வடக்கின் வசந்த திட்டத்தின் கீழ் வெற்றிலைக்கேணி கிராமத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மத்திய அரசாங்க ஆதரவுள்ள அரசியல் கட்சி அரசியல் வாதிகளின் தலையீட்டால் அவர்களுக்கு கடந்த தேர்தலில் இம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காகவும் மின் இணைப்பு வழங்கவில்லை " என்கின்றார் . ஆனால் முதற் கட்டமாக ஒரு பகுதியினருக்கு வெற்றிலைக்கேணி பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது . விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் மின்சார சபையினரின் பூர்வாங்க செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி மின் அத்தியட்சகர் அறிவித்துள்ளார். இவர்களுக்கான இணைப்பு காலக்கிரமத்தில் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.அதைவிட்டுவிட்டு யதார்த்தம் தெரியாமல் ஊடக நேர் காணல் வழங்கக்கூடாது.

கருத்துகள் இல்லை: