ஞாயிறு, 18 மே, 2014

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்

சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இந்த மே 18. 

இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.

வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின் இருப்பையும் அடியோடு புதைத்து அதள பாதாளத்துக்;குள் எம்மக்களை தள்ளிவிட்டுள்ளது.  இதற்குள் அகப்பட்டு மடிந்து போன மானிட உயிர்களோ ஏராளம்.

மரணித்த உறவுகள் யாவும் எமது இனத்தின் உறவுகளே. இந்த நினைவுகூரலை வருடந்தோறும் முன்னெடுக்கும்  எம்மவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தாது இந்த நாள்  நினைவு கூறப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

எனவே எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் எம்மக்களின் வாழ்விடச்சூழலில் மனித உரிமைகளை மதிக்கும் நிலமைகள்; ஏற்படுத்தப்பட்டு கடந்த காலத்தின் அவலத்திலிருந்து  எமது மக்கள் மீண்டௌவேண்டும். 

இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். கடந்த காலத்தின் அவலங்களிலிருந்து மீண்டெழவென எம்மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இனி வரும் காலங்களில் எம் இனத்திற்கு நிம்மதியான, அமைதியான வாழ்வை உத்தரவாதம் செய்வதாக அமைய வேண்டும் என்பதே  பெருவிருப்பாகும். 

புதன், 14 மே, 2014

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலயசிரமதான நிகழ்வில் 12/05/2014

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜன நாயகக்கட்சி வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் மற்றும் வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களோடு பங்கு தந்தையும் விளையாட்டு கழக அங்கத்தவர்களும்



சனி, 10 மே, 2014

குடத்தனை பகுதியில் இருந்து இடம் பெயர்கின்றது மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை

 
8/5/2014 மாலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் குடத்தனை பகுதியில் அமைந்திருக்கும் மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை சேதமுற்றது.. ஆட்பதிவு பிரிவு பகுதியில் இருந்த கணனிகள் மற்றும் ஆவணங்கள் மழையால் நனைந்தும் சேதமுற்றுள்ளது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.ஆட்பதிவு பிரிவு பகுதி கூரைகள் காற்றால் சுமார் 70 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டது. பெரும்பாலான பிரிவுகள் நிரந்தரமாக மருதங்கேணி பகுதியில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்துக்கு இடம் மாற்றும் செயற்பாடுகள் நடைபெறுவதை நேரடியாக அவதானிக்க கூடியதாகவுள்ளது