திங்கள், 28 ஏப்ரல், 2014

இனிவரும் காலங்கள் எமக்கான காலங்கள்" உடுத்துறை விளையாட்டு நிகழ்வில் தோழர் உதயன்



மருதங்கேணி பிரதேசமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றினால்  மக்களுடைய பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்றும் பின்தள்ளப்பட்டவையாக இருந்து விடமுடியாது மக்களின் பௌதீக தேவைகள் உட்பட வாழ்வாதார தொழில்கள், கல்வி மற்றும் துறைசார் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக நாம் உள்ளோம் என ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்தார்.  

மருதங்கேணி பிரதேச இளைஞர் கழக சம்மேளன வருடாந்த இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாம் கடந்து வந்த பாதைகள் வலிகளும் சுமைகளையும் தாங்கியவையாக இருந்தாலும் தற்கால சிறார்களை கல்வியறிவிலும் துறைசார் ரீதியான செயற்பாடுகளிலும் வளர்த்தெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை நிலை ஒளிமயமாக மாற்றமடையும். அத்துடன் இளைஞர் சக்தி ஓர் நாட்டின் இன்றியமையாததாக அமைகிறது எனவே அவர்களின் உழைப்புக்களை யாரும் தமது நலன்களுக்காக சுரண்டி விட இடமளிக்காத வகையில் எமது பிரதேசங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் எதிர்காலச்சந்ததிக்கு முன்னுதாரணமாகவும் இளைஞர் சக்தியானது செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் இவ்வாறான இளைஞர் கழகங்கள் மற்றும் இளைஞர் கழக சம்மேளனங்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு என்றும் எமது உறவுக்கரம் கொடுப்போம் எனத்தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான  சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் பூ.சஞ்ஜீவன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை எதிர்கட்சித்தலைவர் இ.அரிகரன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் ஐ.தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

வியாழன், 24 ஏப்ரல், 2014

பருத்தித்துறை சாலை கலந்துரையாடல்


இன்று மாலை 7 மணியளவில் வடபிராந்திய போக்குவரத்து துறையின் பருத்தித்துறை சாலை பிரிவினருடானான சந்திப்பு சாலை முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கனோடு வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களும் பங்கு கொண்டார்.சாலையின் தொழிற்சங்க பிரதி நிதிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டதோடு பருத்தித்துறை சாலையின் மேம்பாடு குறித்தும் ஊழியர்களின் நலன்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு மக்களுக்கான சிறந்த சேவை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது 




திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்.