வியாழன், 15 செப்டம்பர், 2011

அரசு, கூட்டமைப்பு பேச்சு வார்த்தை இன்று: காற்றில் பறந்த கூட்டமைப்பின் கோரிக்கைகள்!!

அரசாங்க பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை மீண்டும் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இன்றைய சந்திப்பில் அரசாங்க தரப்பிற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுவில் எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  கடந்த ஜனவரிக்கு பின்னர் 9 தடவைகள் இருதரப்பும் சந்தித்து பேசிய போதிலும் அரசாங்க தரப்பு இணங்கிய எந்த விடமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் பதில் வழங்கினால் மட்டுமே தாம் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், அரசுத்தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பும் நாளை சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-நன்றி தமிழ் சி.என்.என்.இணையம்-

கருத்துகள் இல்லை: