சனி, 24 செப்டம்பர், 2011

facebook இவ்வாரம் வெளியிட்ட 5 முக்கியமான புதிய மாற்றங்கள்!

Facebook ஸ்தாபகர் Mark Zukerberg கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த facebook இன் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான புதிய மாற்றங்களை ஒரே பார்வையில் இங்கு தருகிறோம்.

1 – Timeline – இது உங்களைப்பற்றிய ஒரு தகவல் ஓடையாகும். இது புகைப்படங்கள் மற்றும் ஏனைய பதிவுகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இல் இணைந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்க்கலாம்.

2 – Facebook Gestures – இது நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு இலகுவாக வெளிப்படுத்தும் வசதியாகும். இதன்மூலம் அதிகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

3 - உங்களைப்பற்றிய தகவல்களை பயன்பாட்டாளர்கள் உங்கள் கணக்கில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரே தடவையில் அனுமதியைப்பெறும் முறை. இதன்மூலம் ஒவ்வொருமுறையும் அனுமதிபெறத்தேவையில்லை. இதனால் உங்கள் செய்தியோடை நிரம்பிவிடுமென அஞ்சத்தேவையில்லை.

4 – உங்களினதும் உங்களின் நண்பர்களினதும் முக்கியத்துவம் குறைந்த நடவடிக்கைகள் Ticker எனப்படும் பகுதிக்கு தானாகவே மாற்றப்படும்.

5 - facebook இலிருந்தவாறே பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். உங்கள் நண்பர்கள் பார்வையிடும் திரைப்படங்கள் முதலானவற்றை facebook இன் Ticker உங்களுக்கு அறிவிக்கும். நண்பர்களுடன் இணைந்து பாடல் கேட்கலாம்.

facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 800 மில்லியனை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 500 மில்லியன் பேர் facebook ஐ பார்வையிட்ட சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.








செவ்வாய், 20 செப்டம்பர், 2011

செந்தமிழ் வி.க. ஆதரவுடன் வடமராட்சி கிழக்கில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு.

வடமராட்சிகிழக்கு பகுதியில் செந்தமிழ் விளையாட்டுகழகத்தினர் நடாத்தும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.இன்றையதினம் வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டு கழகமும்,வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழகமும் மோதின.இறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் உதயசூரியன் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.இந்த நிகழ்வு இன்று மாலை ஐந்து மணிக்கு உடுத்துறை செந்தமிழ் கழக மைதானத்தில் இடம்பெற்றது.



வியாழன், 15 செப்டம்பர், 2011

அரசு, கூட்டமைப்பு பேச்சு வார்த்தை இன்று: காற்றில் பறந்த கூட்டமைப்பின் கோரிக்கைகள்!!

அரசாங்க பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை மீண்டும் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இன்றைய சந்திப்பில் அரசாங்க தரப்பிற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுவில் எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  கடந்த ஜனவரிக்கு பின்னர் 9 தடவைகள் இருதரப்பும் சந்தித்து பேசிய போதிலும் அரசாங்க தரப்பு இணங்கிய எந்த விடமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் பதில் வழங்கினால் மட்டுமே தாம் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், அரசுத்தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பும் நாளை சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-நன்றி தமிழ் சி.என்.என்.இணையம்-

இனி இப்படித்தான் பாடம் சொல்லித்தருவார்கள்(பட இணைப்பு)

ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம்,
சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.
அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.
இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.
இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.
இணையதள முகவரி

பேஸ்புக்கில் +music வசதியை பெறுவதற்கு

முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3, Radio இசையினை நேரடியாக பகிரவும், கேட்கவும் +music வசதியளிக்கிறது.
இந்த வசதியினை பெற + music  இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும்.

சனி, 10 செப்டம்பர், 2011

KingSoft Office Suite 2012: மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்றாக ஒரு மென்பொருள்

நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.
இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
தரவிறக்க சுட்டி http://www.kingsoftstore.com/download/office_suite_free_2012.exe

புதன், 7 செப்டம்பர், 2011

வடமராட்சிகிழக்கில்...07/09/2011

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கட்டுமானத்தில் இந்திய சிற்பிகள்..

 நாகர்கோவில் கண்ணகை அம்மன்.


 

    உணவத்தை கண்ணகை அம்பாள் ஆலய வளாகம் வெற்றிலைக்கேணி....






 

திங்கள், 5 செப்டம்பர், 2011

ISO கோப்புகளை உருவாக்குவதற்கு...!

விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.

இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.

இணையதள முகவரி : BDlot DVD ISO