புதன், 23 மே, 2012

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவு?

இலங்கையின் அரசியலில் பல்வேறுபட்ட அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவது வழமையாகி விட்டதொன்று,யுத்தம் நிறைவடைந்த பின்பு பல்வேறு கட்சிகளால் பேசப்படும் விடயம் அரசியல் தீர்வு.அரசு அனைத்துக்கட்சி தெரிவுக்குழுவை அமைத்தது இதில் கூட்டமைப்பு இடம்பெறாதது யாவரும் அறிந்ததே,அந்தக்கட்சிக்குள் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் உறுப்பினர்கள் உள்ளமை கவலையான விடயம்.தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது யாதெனில் "ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டு விட்டு தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை பெறுவதே.ஆனால் கூட்டமைப்பின் முடிவோ இதுவரையில் சாதகமாக அமையவில்லை.

ஞாயிறு, 13 மே, 2012

மே தினமும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்.



உலகளாவிய ரீதியில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை நினைவு படுத்தும் முகமாக மேதினம் கொண்டாடப்படுகின்றது.இலங்கையில் பல பாகங்களில் கொண்டாடியது பல்வேறு அரசியல் கட்சிகள்.அந்த வகையில் வடக்கே யாழில் பெருமேடுப்பாக எதிர்கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் கொண்டாடியமை அனைவரின் கவனத்தையும் ஈர்ந்தது.நிகழ்வுக்கு முன்பாக யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த ரணில் "நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த மே தினம் பயன்படும் என கூறினார்"அனால் அவரின் மேதினத்தில் உள்ள சுய நலத்தை கூட்டமைப்பும் யாழ் மக்களும் அறியாதிருப்பது வேதனையே.
எப்போதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தாயகம் சார்ந்த கோட்பாடுகளையும் புலி ஆதரவையும் இணக்க தவறுவதில்லை.மாறாக தனித்து கொண்டாடாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கொண்டாடியமை வெட்கப்பட வேண்டியதொன்று.கடந்த உள்ளூராட்சி தேர்தலிலும் "முள்ளி வாய்க்கால் மக்களின் அவலங்களை முன்னிறுத்தி வென்றது.மாறாக தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
கடந்தவாரமும் மாவை சேனாதிராசா பாராளுமன்றில் ஈழம் பற்றி பேசினார்.என்னதான் பேசினாலும் பயனில்லை.தமிழ் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.எனவே அரசுடன் தெரிவுக்குழுவில் பங்கேற்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க தமிழ் கூட்டமைப்பு முற்பட்டால் அதுவே மக்களின்  அபிலாசைகளை நிறைவேற்ற கூட்டமைப்பு எடுக்கும் ஆக்க பூர்வமான செயற்பாடாக அமையும்