செவ்வாய், 11 அக்டோபர், 2011

இன்று வானில் குட்டி நிலா தெரியும்: நிபுணர் தகவல்

வழக்கத்தை விட 12 சதவீத அளவு குறைந்த மற்றும் ஒளி மங்கிய நிலவு இன்று வானில் தெரிய உள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கன் இது குறித்து கூறியதாவது: சந்திரன், பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
பூமியிலிருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கி.மீ தூரத்தில் உள்ள போது சந்திரன் பிரகாசமாகவும், அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும்.
பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு அதாவது 4 லட்சத்து 6 ஆயிரத்து 434 கி.மீ தூரத்துக்கு செல்லும் போது அளவில் சிறியதாகவும், ஒளி மங்கியதாகவும் காட்சியளிக்கும்.
கடந்த மார்ச் மாதம் பூமிக்கு அருகே வந்த போது 30 சதவீதம் அதிக ஒளியுடன் நிலவு காட்சியளித்தது.
தற்போது பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றுள்ளதால் இன்று 12.5 சதவீதம் அளவு குறைந்து, ஒளியும் குறைந்து காட்சியளிக்கும். இது ஒரு அபூர்வ வானியல் நிகழ்வாகும் என்றார்.

கருத்துகள் இல்லை: