செவ்வாய், 24 டிசம்பர், 2013

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதி மின்இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் தொடக்கி வைத்தார்

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதி மின்இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.  

மருதங்கேணி பிரதேசத்திலுள்ள வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய பிரதேசங்களுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 263 குடும்பங்களினை உள்ளடக்கிய வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு 2 கோடி ஒரு இலட்சம் ரூபாய ;செலவிலும் 300குடும்பங்களினை உள்ளடக்கிய கட்டைக்காடு பிரதேசத்திற்கு ஒருகோடி எழுபது இலட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்பட்ட இவ்மின் இணைப்பானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பிரதேச மக்கள் கிறிஸ்மஸ் காலப்பகுதிக்கு தமக்கு மின் இணைப்பினை தருமாறு கோரியதற்கு அமைவாக நேற்று இவ்விரு பிரதேசத்திற்குமான மின் இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்; உதயன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன், யாழ்.மாவட்ட மின்பொறியியலாளர் ஞானகணேசன், துறைசார் அதிகாரிகள், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 21 மார்ச், 2013

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டி 2013

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டி 2013 ல் உதைபந்தாட்டபோட்டி வத்திராயன் மைதானத்தில் றம்போவும் உதயசூரியனும் மோதியபோது.......